‘அயோக்யா’: விஷாலின் புதிய படம் இன்று பூஜையுடன் தொடக்கம்

சென்னை: 

டிகர்  விஷால் நடிக்கும் அயோக்யா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

சென்னை ஈ.சி.ஆரில் உள்ள  ஒரு பிரம்மாண்ட அரங்கில் அயோக்யா படத்திற்கான பூஜை இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இந்தப் படத்தை இயக்குகிறார்.  இந்த படத்துக்கு ‘விக்ரம் வேதா’  சாம் சி.எஸ். இசை அமைக்க  ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். பி மது, தனது லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பேனரில் இந்த படத்தை  தயாரிக்கிறார்.  இந்தப் படத்தில் விஷாலுடன், நடிகர்  பார்த்திபன், சச்சு, வம்சி உள்பட இயக்குனர்  கே.எஸ்.ரவிகுமாரும்  நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள் ஜிகே ரெட்டி, கலைப்புலி எஸ்.தாணு, ரவி பிரசாத், கே.எஸ்.ரவிகுமார், கட்டரகட்டா பிரசாத், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

அயோக்யா படம், கடந்த 2015ம் ஆண்டு  தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான  ‘டெம்பர்’ திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.