durga-pooja
இந்த வருட ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ் நாட்டில் மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருட ஆயுத பூஜையை குறிவைக்கும் படங்கள் சிவகார்திகேயன் நடிப்பில் “ரெமோ”, விஜய்சேதுபதியின் நடிப்பில் “றெக்க”, 12வருடங்கள் கழித்து தமிழ்சினிமாவில் மீண்டும் கால் பதிக்கும் பிரபுதேவாவின் “தேவி” ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது, இந்த திரைப்படங்களில் உள்ள பிளஸ் மற்றும் மைனஸ் பற்றிய ஓர் அலசல் தான் இது.
சிவகார்திகேயனின் : ரெமோ
Remo Poster
ப்ள‌ஸ் : சிவகார்திகேயன் படம் என்றாலே குடும்பம் குடும்பமாக கிளம்பி திரையர‌ங்குகளுக்கு வந்து விடுவார்கள் அந்த அளவுக்கு ரசிகர்களை அவர் கவர்ந்து வைத்துள்ளார். மேலும் ரெமோ டிரெய்லர் வெளியானதும் சிவகார்த்திகேயனை இப்படி ஒரு கெட்டப்பில் பார்த்ததும் மக்கள் மத்தியில் இருந்த ஆர்வம் இரட்டிப்பானது, கமலஹாசன் அவ்வை சண்முகி திரைப்படத்தில் எப்படி நடித்தாரோ அதே பாணியில் இவரும் நடித்துள்ளார்.
மைனஸ் : பொதுவாக தமிழ்சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் எந்த திரைப்படமும் ரசிகர்களை பூர்த்தி செய்யாவிட்டால் அந்த திரைப்படத்தை குப்பையில் வீசுவது நம் மக்களின் வழக்கம், இதனால் இந்த திரைப்படம் ஒரு விஷ பரிட்சையில் வெளிவருகின்றது. அது மட்டும் அல்ல இந்த திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதால் இப்படத்துக்கு இதுவும் இன்னொரு மைனஸ்.
விஜய் சேதுபதியின் : றெக்க
Rekka Poster
ப்ளஸ் : விஜய் சேதுபதி, லஷ்மிமேனன் நடிப்பில் ரத்தினசிவா இயக்கத்தில் மிக குறுகிய காலத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் தான் றெக்க. விஜய்சேதுபதி இந்த ஆண்டு மட்டும் ஆறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது, இதில் 5 திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றுத் தந்துள்ளது, எனபது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் காசு அல்லிக் கொட்டும் அதிஷ்ட்ட நாயகியாக பார்க்கப்படும் லஷ்மிமேனன் இந்த திரைப்படத்தில் இருப்பதால் என்னவோ எல்லா விநியோகிஸ்தர்களும் இந்த றெக்கையை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மைனஸ் : முதன் முறையாக விஜய் சேதுபதி கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளதால் கதையின் நாயகனாக பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியை கமர்ஷியல் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொளவதில் சந்தேகமே.
பிரபுதேவாவின் : தேவி
cthqroiumaanzi9
ப்ளஸ் : முதலில் இது ஒரு பேய் படம். 12 வருடங்கள் கழித்து தமிழ்சினிமாவில் மீண்டும் தேவி படத்தின் மூலம் கால் பதிக்கும் பிரபுதேவா. அது மட்டுமல்ல‌ தமன்னாவின் தோழா, தர்மதுரை படத்தின் வெற்றி இதிலும் தொடரும் என்று ஓர் நம்பிக்கை உள்ளது. நல்ல கதைகளை மட்டும் இயக்கும் இயக்குநர் விஜய் ஆகியோர் எல்லாம் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்
மைனஸ் : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தனித்தனியாக உருவாகியிருப்பதாக சொல்லப்பட்டாலும் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை பார்த்தால் டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரிய மைனஸ்.
இந்த திரைப்படங்களில் எது உண்மையான வெற்றி பெரும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.