ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி – வீட்டிலேயே முடக்கம்!

புதுடெல்லி: ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் ஒய் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவர்கள் இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“இன்று நடைபெற்ற பரிசோதனையில் எனக்கு கொரோனா கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது. எனது நிலைமை சரியாக உள்ளது என்பதால், நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

எனவே, என்னுடன் கடந்த 1 வார காலத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.