இம்ப்ரோ சித்த மருந்து குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆயுஷ்க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

மதுரை:
துரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோ கொரோனா நோயை கட்டுப் படுத்துமா என்பது குறித்து  ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சித்தா மற்றும் ஓமியோபதி மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  வழக்கு தொடர்ந்தார். தான்   கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை  விசாரித்த  நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இதற்காக   மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும்,  நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும்,  இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ந்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

You may have missed