அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்! டில்லியில் பரபரப்பு

டெல்லி,

லைநகர் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இன்று 23வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் விவசாயி கள் தங்களுடைய  கை மற்றும் கால்களை கயிறால் கட்டிக்கொண்டு தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது, விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுக்கு திடீர் உடலக் குறைவு ஏற்பட்டடு மயக்கம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பு அடைந்தது. உடனடியாக அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் கடந்த 14-ம் தேதி முதல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பல்வேறு வகையான நூதன போராட்டம் நடத்தி வந்த அவர்கள் இன்று கை கால்களை கட்டிக் கொண்டு அங்கபிரதட்சனம் செய்து போராட்டம் நடத்தினார்

இன்றைய  போராட்டக் களத்தில் அய்யாக்கண்ணு திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, அய்யாக்கண்ணு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு விவசாயியான துவரங்குறிச்சி பழனிச்சாமிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மோடிக்கு நல்ல புத்தி கொடுக்க கடவுளை வேண்டி அங்க பிரதட்சணம் செய்வதாக விவசாயிகள் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed