அய்யப்ப தரிசனம்: சபரிமலையை நெருங்கினர் பத்திரிகையாளர் உட்பட  இரு பெண்கள்

பரிமலைக்கு வரும் பெண்களை போராட்டக்காரர்கள்  விரட்டியடிக்கும் பரபரப்பான சூழலில் சபரிமலை நோக்கி பெண் பத்திரிகையாளர் உட்பட இரண்டு பெண்கள்  சபரிமலையை நெருங்கியுள்ளனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதையடுத்து சபரிமலைக்கு பெண்களும் வருவதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு செய்தது.  சபரிமலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆர்.எஸ்.எஸ். உட்பட சில  இந்து அமைப்புகள் சில, சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என போராட்டம் நடத்தின. மேலும், சபரிமலை அருகே கூடி, அய்யப்பனை தரிசிக்க வரும் பெண்களை தாக்கி திருப்பி அனுப்பின.

இதனால் பல இடங்களில் மோதல், தடியடி ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பம்பையில் இருந்து சபரிமலை நோக்கி ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா உட்பட இரண்டு பெண்கள் அய்யப்பனை தரிசிக்க சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அய்யப்பன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது இருக்கின்றனர்.

இவர்களுக்கு ஐஜி ஸ்ரீஜித் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.