தராபாத்

தராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தாமாக வந்து கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார்.

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இங்கு இதுவரை 33400 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 348 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் ஐதராபாத் பகுதியில் மட்டும் நேற்று வரை 25774 பேர் பாதிக்கப்பட்டு 23 பேர் உயிர் இழந்துள்ளனர்.    இது ஐதராபாத் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் கடும் பீதியை உண்டாக்கி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் அகில இந்திய மஜிலிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும்  ஐதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி நேற்று தாமாகவே முன் வந்து சார்மினார் யுனானி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார்.   மக்கள் அனைவரும் முன் வந்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்னும் விழிப்புணர்வை உண்டாக்க அவர் இவ்வாறு செய்துள்ளார்.

இது குறித்து ஓவைசி,” கொரோனா பாதிப்பு குறித்த ஆண்டிஜன் மற்றும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளை நான் செய்துக் கொண்டேன்.  ஆண்டிஜன் சோதனையில் பாதிப்பு உறுதி ஆகவில்லை.   தெற்கு ஐதராபாத் பகுதியில் 30 ஆண்டிஜன் பரிசோதனை மையங்கள் உள்ளன.  எனவே மக்கள் அனைவரும் தவறாமல் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.” எனத் தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.