கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வரத் தயார் : அழகிரி அறிவிப்பு

சென்னை

ருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதாக அழகிரி கூறியுள்ளார்.

தி மு க தலைவர் கருணாநிதியின் இரு மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் இருவரும் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தனர்.   தற்போது அரசியலை விட்டும் தி மு க வை விட்டும் அழகிரி சிறிது ஒதுங்கி இருக்கிறார்.   கட்சியில் தற்போது ஸ்டாலின் ஆதரவாளர்களே அதிகம் உள்ளனர்.   ஸ்டாலினும் கட்சியிலும் அரசியலிலும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்.

அழகிரி கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வபோது கருணாநிதியை சந்தித்து வருகிறார்.   கடந்த மாதம் நடந்த அவர்கள் குடும்பத்தின் திருமண விழாலில் அழகிரி பங்கேற்ற போது கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து உள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் அழகிரி செய்தியாளர்களிடம் உரையாடினார்.  அப்போது அவர், “தி முக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.   கருணாநிதி அழைத்தால் நான் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என கூறி உள்ளார்.