’அழகிய தீயே’ இசை அமைப்பாளருக்கு கொரோனா தொற்று..

--

ய் நீ ரொம்ப அழகா இருக்கே, யுனிவர்சிட்டி, நல தமயந்தி, அழகிய தீயே உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ரமேஷ் விநாயகம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார்.


இது பற்றி அவர் கூறியதாவது:
மார்ச் மாதம் இறுதியிலிருந்தே நான் வீட்டை விட்டு செல்லவில்லை. ஒரே முறை மட்டும் காரில் சென்று வந்தேன், என் உடல் நலனை பத்திரமாக பார்த்துக்கொண்டிருந்தேன். உறவினர் ஒருவர் காய்கறி வங்கி தருவார் அவர் மூலமாக என்=க்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம்.
லேசான காய்ச்சல் இருந்தது மாத்திரை சாப்பிட்டேன் குணமாகவில்லை. டாக்டரிடம் கொரோனா டெஸ்ட் எடுத்தேன். பாசிடிவ் என்று தெரிந்தது. பின்னர் தனி பிளாட்டுக்கு சென்று தனிமைபடுத்திக்கொண்டேன். என் சகோதரிகள் உணவை வீட்டு வாசலில் விட்டு விடுவார்கள். நான் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டேன், ஒரு கட்டத்தில் மார்பு இறுக்கத்தையும், ஆக்ஸிஜன் குறையத் தொடங்கியதும் உணர்ந்தேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப் பட்டபோது எல்லோரும் பயந்தார்கள். என்னை இழக்க நேரிடும் என்று நினைத் தார்கள். எனக்கும் அந்த அந்த பயம் இருந்தது.
யாருக்கு வேண்டுமானாலும் வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். உங்கள் உடலைக் கவனியுங்கள். அவசரத்துக்கு வெலியில் சென்று வந்தால் வைரஸை வீட்டிற்கு கொண்டு வருபவராக இருக்கலாம். நான் குணம் அடைந்த பிறகு ஒரு கவிதை எழுதினேன். நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன்.
இவ்வாறு ரமேஷ் விநாயகம் கூறினார்.