பி.எட். பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் …

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணம் :  SC/ST விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம்  செலுத்த வேண்டும். மற்றப் பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

மேலும்,  care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.