தமிழகத்தில் பாகுபலி-2 வெளியாவதில் சிக்கல் நீடிப்பு!

சென்னை,

ரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பாகுபதி-2-ன் தமிழ் பதிப்பு வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

ரசிகர்களிடையே மிகந்த எதிர்பார்பை ஏற்படுத்திய பாகுபலி 2ன் தமிழ் பதிப்பு  சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக வெளியாகவில்லை.

ஆனால், மற்ற மாநிலங்களில் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் பாகுபலி-2 படத்தின் முழு பகுதியும் இணையத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்தியாவிலேயே அதிக செலவில் பிரம்மாண்டமாக  தயாரிக்கப்பட்ட பாகுபலி-2 அதிக தொகைக்கு விற்பனையானது. அதேநேரத்தில் அதிகபட்ச டிக்கெட் கட்டணமும் விதிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

சென்னையில் பட தயாரிப்பாளர்கள் மற்றும் பட விநியோகஸ்தர்கள் இடையேயான ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக தமிழில் இப்படம் ரிலீஸ் செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் இணையதளங்களில் பாகுபலி 2 தமிழ் பதிப்பின் முழுப்படமும் வெளியாகி  பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே பாகுபதி படத்தின் டிரெய்லர் இந்தி பதிப்பு படக்குழுவினர் வெளியிடுவற்கு முன்பே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பாகுபலி-2 படத்தின் தமிழ்பதிப்பு இணையதளத்தில் வெளியாகி உள்ளதால்  படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சமரசம் ஏற்பட்டால் பாகுபலி 2 இன்று பிற்பகல் முதல் தமிழகத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழியில் இணையளதங்களில் வெளியானதாலும், பண விவகாரத்தாலும் பாகுபதி-2ன் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed