செப்-17ல் சைனாவில் பாகுபலி-2! டங்கலை முந்தி சாதனை படைக்குமா?

நாடு முழுவதும் வசூலில் சக்கைப்போடு போட்டுவரும்  பாகுபலி-2  சைனாவிலும் வெளியாக இருக்கிறது.

பிரபல டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடித்த படம் ‘பாகுபலி-2’. இந்த படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி  ஆகிய 4 மொழிகளில் தயாரிக்கப் பட்டு, உலகம் முழுவதும்  ஏப்ரல் 28ந்தேதி வெளியாகி 1800 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை சீனாவில் வெளியிட பாகுபலி தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17ந்தேதி பாகுபலி-2 சீனாவில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே அமிர்கானின் டங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

சீனாவில் மட்டும் ஒரு மாத காலத்திற்கு மேலாக தியேட்டர்களில் ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகி 1150 கோடி ரூபாய்க்கு மேலாக வசூலில் சாதனை படைத்துள்ளது.

ரூ 1930 கோடி வசூலுடன்  உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய  ஆங்கிலம் அல்லாத திரைப் படங்களில் ஐந்தாம் இடத்தில் டங்கல் உள்ளதாக. ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை யில் கூறி உள்ளது.

இந்நிலையில், பாகுபலி-2 திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி, இதுவரை 1800 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தற்போது ராஜமவுலியின் பாகுபலி-2 சீனாவில் வெளியாவதன் காரணமாக டங்கலின் வசூலின் சாதனையை முறியடிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே 1800 கோடி வசூலாகி உள்ள நிலையில், சீனாவிலும் பாகுபலி-2 படம் வெளியாக இருப்பதால், டங்கல் படத்தின் வசூலை முந்தி சுமார் 3000 கோடி வசூலை எட்டி, வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி