Random image

” அரசு அனுமதி அளித்தால் ரூ.35 க்கு பெட்ரோல், டீசல் வழங்குவேன் ” – பாபா ராம்தேவ்

அரசு அனுமதி அளித்தால் 35 ரூபாய்க்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவேன் என பாபா ராம்தேவ் கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. எரிப்பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ramdev

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சாமியார்களில் ஒருவரான பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். யோகா நிபுணரான பாபா ராம்தேவ், பாஜகவின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாபா ராம்தேவ் பங்கேற்றார்.

அப்போது பேசிய பாபா ராம்தேவ் “ அரசு சில வரிச்சலுகளுக்கு அனுமதி அளித்தால் இந்தியா முழுவதும் ரூ.35-40க்கு பெட்ரோல் மற்றும் டீசலை வழங்குவேன். எரிப்பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். தொடர் விலை உயர்வு மோடி அரசை கடுமையாக பாதிக்கும். அவர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என கூறினார்.

மேலும், “ நான் பணத்தை தேடி ஓடவில்லை, பணம் என்னை தேடி வருகிறது. அரசியலில் இருந்து நான் விலகிவிட்டேன். நான் எல்லா கட்சியிலும் இருப்பேன், ஆனால், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. சிலர் பசுக்களை மத ரீதியாக பார்க்கின்றனர். பசுவிற்கு என்று மதம் கிடையாது” என்று தெரிவித்தார். நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், பாபா ராம்தேவ் இவ்வாறு கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.