பாபர் மசூதி இடிப்பு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் அத்வானி இன்று ஆஜர்

லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் துணை பிரதமரும், மூத்த அரசியல்வாதி யுமான அத்வானி இன்று ஆஜராகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பரில்,
இடிக்கப்பட்டது.  இதுதொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர் அத்வானி , முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில், இந்த வழக்கை ஆகஸ்ட், 31ந்தேதிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியது. அதையடுத்து, வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தினசரி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிபதி எஸ்.கே.யாதவ்  விசாரணை செய்து வருகிறார்.
நேற்றைய விசாரணையின்போது, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆஜரானார்.  அவர் அளித்த வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று (ஜூலை 24) பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க உள்ளார்.