’’பாபர் மசூதியை இடித்ததால் கோயில் கட்ட வழி பிறந்தது’’ -கல்யாண் சிங் தடாலடி பேட்டி

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருந்தவர் பா.ஜ.க.வின் கல்யாண் சிங்.

அயோத்தியில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெறும் நிலையில்-.
28 ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்தது என்ன? என்பது குறித்து கல்யாண் சிங் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.


அதன் விவரம்:
’’ அன்று ( டிசம்பர் 6) அயோத்தியில் இருந்து மாவட்ட ஆட்சியர் எனக்கு போன் செய்தார்.
’பாபர் மசூதி அருகே மூன்றரை லட்சம் ’கார் சேவகர்கள் திரண்டுள்ளனர். அவர்களை எதிர்கொள்ள மத்திய படையினர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
’கார்சேவகர்கள்’ மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டுமா?வேண்டாமா? ’’என என்னிடம் அனுமதி கேட்டார்.
நான் மறுத்து விட்டேன். துப்பாக்கி சூடு நடத்த நான் ஆணையிட்டிருந்தால், ஏராளமான உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும். இதனால் நாடு முழுவதும் சட்டம்.ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கும். துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட மறுத்ததற்காக நான் பெருமை படுகிறேன்.
1528 ஆம் ஆண்டு முகாலய மன்னர் பாபரின் படைத்தளபதி மீர்பாகி, ராமர் கோயிலை இடித்து தள்ளினார். அங்கு வேறு வழிபாட்டுத்தலம் கட்டும் நோக்கம் அவருக்கு இல்லை. இந்துக்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்பதே அவர் எண்ணம்.
என்ன செய்வது? அந்த கட்டிடம் ( மசூதி) நான் முதல் –அமைச்சராக இருக்கும் போது இடித்து தள்ளப்படும் என்பது விதி. அன்று( டிசம்பர் -6) மசூதி இடிக்கப்படவில்லை என்றால், உச்சநீதிமன்றம்’’ தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்’’ என கருத்து சொல்லி இருக்கும்.. மசூதி அன்று இடிக்கப்பட்டதால், இன்று ராமர் கோயில் கட்ட வழி பிறந்துள்ளது.
அயோத்தியில் கோயில் கட்டிமுடிக்கப்படும் வரை நான் உயிரோடு இருக்க வேண்டும். கோயிலை பார்த்து விட்டுத்தான் மரணிக்க விரும்புகிறேன். மீண்டும் அயோத்தியில் பிறக்க வேண்டும்’’
இவ்வாறு தடாலடியாக பேட்டி அளித்துள்ளார், கல்யாண் சிங்.
-பா.பாரதி.