குழந்தை பெற்றவர் ஆணா பெண்ணா?: பிரிட்டனில் சர்ச்சை

லண்டன்:

பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று அறிய அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் “குழந்தை பெற்றவர் ஆணா, பெண்ணா” என்ற சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது பிரிட்டனில்.

இங்கிலாந்தில் உள்ள குலுஸ்டார் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர், மற்ற பெண்களை விட தான் சற்று வித்தியாசமாக இருப்பதாக நினைத்தார்.  இதற்கான சிகிச்சை மேற்கொண்ட பொழுது அவரின் உடலில் குரோமோசோம் குறைபாடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு, முழுவதும் ஆணாக மாறினார் பைகே. ஆனால், கருப்பையை மட்டும் அகற்றாமல் விட்டுவிட்டார்.

இந்த நிலையில் அவருக்கு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவே, மருத்தவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி விந்து தானமாக கொடுப்பவரின் மூலம் அவர் செயற்கை முறையில் கருவுற்றார். இந்நிலையில் இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், “அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆணாக மாறியதால் பைகே ஒரு ஆண்தான். ஆகவே ஒரு ஆண், கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்” என்று சிலர் கூறுகிறார்கள்.

வேறு சிலரே, “பைகே இயற்கையில் பெண்தான். ஆணாக மாற முயற்சி செய்து அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனாலும் கர்ப்பப்பையை அகற்றிக்கொள்ள வில்லை. ஆகவே அவர் எப்போதுமே பெண்தான்” என்கிறார்கள்.

மொத்தத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட நபர் ஆணா  பெண்ணா என்கிற வித்தியாசமான சர்ச்சை பிரிட்டனில் நடந்து வருகிறது.