ரஷ்யாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்று 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

child

ரஷ்யாவின் மங்னிட்டோகோர்ஸ் நகரில் 48 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புபடையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஆண் குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு பணியினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட குழந்தை கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன்பின்னர், மீட்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

குழந்தைக்கு உடலில் ஏதும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை பிங்க் நிறத்தில் சாக்ஸ் அணிந்திருப்பதாக ரஷ்ய ஊடங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இடிபாடுகளில் சிக்கிய குழந்தை 35 நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது ஒரு அதிசயமான நிகழ்வு என அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

இதனை தொடர்ந்து குழந்தையை பாதுகாப்பாக மீட்ட மீட்புப் பணி வீரர்களுக்கு அங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.