மும்பை பெண்ணுக்கு கடல் கன்னி போல் பிறந்த குழந்தை

--

மும்பை :

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரும்பு வெட்டும் தொழிலாளி திக்‌ஷா கம்பல் என்ற பெண்ணுக்கு இன்று பிரசவம் நடந்தது. அப்போது குழந்தையின் உடல் கடல் கன்னியை போன்ற உடல் அமைப்புடன் இருந்தது. அதல் பாலினத்தை அறிய முடியாத நிலையில் இருந்தது.

பிறந்த 15 நிமிடங்களுக்குள் அந்த குழந்தை இறந்துவிட்டது. 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் ஒட்டியும், கைகள் மீன் துடுப்புக்களை போல் உடலில் ஒட்டியும் இருந்தது.

சிரேனோமெலியா என்ற ஒரு உடல் வளர்ச்சி குறைபாடு காரணமாக இத்தகைய உடல்வாகு கொண்ட குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அரிதான சமயங்களில் மட்டுமே இவ்வாறு நடக்கும் என்று தெரிவித்தனர்.