சாச்சியுடன் பெற்றோர்

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து 2 நிமிடத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியு சாதனை செய்துள்ளனர்.  இந்தியாவில் மிக குறுகிய காலத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை இதுதான் என்று கூறப்படுகிறது.

சாச்சி என பெயரிடப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர், குழந்தை பிறக்கும் நேரத்தை உறுதி செய்து, ஆதார் பெற தேவையான முன்னேற்பாடுகளை செய்திருந்த நிலையில், குழந்தை பிறந்தவுடன்,  குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் மட்டும் பயன்படுத்தி குழந்தை பிறந்த 1.48 நிமிடங்களில் பால் ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

இது சாதனையாக கருதப்படுகிறது. பொதுவாக ஆதார் எண் பெற நமது பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும். ஆனால்,  5வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாமல் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த சேவை பால் ஆதார் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் சாச்சிக்கு பால் ஆதார் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேய மிக இளைய வயதில் ஆதார் எண் பெற்ற குழந்தை என்ற சாதனையை சாச்சி பெற்றுள்ளார்.