நெட்டிசன்:
 
Anbalagan Veerappan என்பவரது முகநூல் பதிவு


ரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை திருடுவதற்காகவே ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது… இதை எதுவுமே உணராத தமிழக காவல்துறை அவர்களை தப்பிக்க வழிசெய்து கொடுக்கிறது.

சமீபத்தில் இப்படித்தான் சென்னையில் உள்ள ஒரு அரசு மகப்பேறு மருத்துவமனையில் இரவு ஒரு குள்ளமான முரட்டுப் பெண்மணி மகப்பேறு மருத்துவமனையிலேயே (பிறந்த பச்சிளங் குழந்தைகள் இருக்கும் பிரிவு) படுத்துக்கொண்டு வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். நர்ஸ்கள் சில பேர் இரண்டு மணிநேரம் போராடி பேசியும் அசையவே இல்லை.

பின்னர் காவல்துறைக்கு போன் செய்து காவலரை வரவழைத்ததும் வெளிவந்த அந்த பெண்மணியை பார்க்க இரண்டு ஆண் கூட்டாளிகள் (இவர்கள் முன்னரே அவ்வளவு நேரமும் அந்த மருத்துவமனையின் இரண்டு பக்கமும் சுற்றிக்கொண்டே இருந்தவர்கள்) வந்துவிட்டார்கள்.

எங்க அம்மாதான் சார்…கொஞ்சம் புத்தி சுவாதீனம் சரியில்லை என்று சொல்லி பைக்கில் உட்கார வைத்து அழைத்துசெல்கிறார்கள். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டே அனுப்பி வைக்கிறார் காவலர்.

உடன் இருந்த நர்ஸ்கள் அந்த பெண்மணியை ஏன் விசாரித்து அனுப்பவில்லை என்று சத்தம் போட்டதற்கு… அதான் அந்தம்மா பையன் வந்தே கூப்டுகிட்டு போய்ட்டானே ஏன் பிரச்னை பண்றீங்க என்று கூலாக சொல்லிவிட்டு காவலரும் கிளம்புகிறார். இந்த லட்சணத்தில்தான் தமிழக காவல்துறை செயல்படுகிறது.

இனிமேலாவது உசாராக செயல்படுமா தமிழக காவல்துறை?!