குட்டி பாப்பாவுக்கு கொரோனாவா…? குதூகலமாக டிக்டாக் செய்யும் நயன்….!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தன.

வைரலாக பரவிய இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு தங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து டிக் டாக்கில் குறும்புத்தனமான வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதன் வழி தங்களைக் குறித்த வதந்திகளுக்கும் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ஃபில்டரைப் பயன்படுத்தி குழந்தைகள் போன்று முகத்தை மாற்றி அமைத்து குதூகலமாக விளையாடுவதாக அவர்கள் வீடியோவைப் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், “எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்த்து வருகிறோம்.

நாங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். உங்கள் கற்பனை நிறைந்த நகைச்சுவைகளை பார்த்து சிரிக்கும் அளவிற்கு கடவுள் எங்களுக்கு உறுதியையும் சந்தோஷத்தையும் தந்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.