கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி வாழ்க்கை வாழந்து தியாகம் செய்தவர் எம். நடராஜன் என்று திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தினார்.

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான எம். நடராஜன் கடந்த 20ம் தேதி மறைந்தார். அவரது படத்திறப்பு நிகழ்வு தற்போது தஞ்சையில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கிறார்.

இதுவரை அவர் பேசியதில் இருந்து…

“தன்னுடைய நேர்மறை அணுகுமுறையால் எதிரியையும் வளைத்துப்போடும் திறமை வாய்ந்தவராக விளங்கினார் எம். நடராஜன்.

அவரை சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கு அவர் எம். என். ஆக விளங்கினார். அவரை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு எமனாகவும் விளங்கினார்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து தியாகம் புரிந்தவர் அவர். தான் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்ட சசிகலாவை பிரிந்து முப்பது வருடங்கள் வாழ்ந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, இனியாவது சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அழைத்து வந்து வீடு பார்த்து தனியாக வாழ வேண்டும் என்று நெருக்கமானவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார்.

தமிழகத்துக்கு ஒரு ஆளுமை வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கைத் துணையை அர்ப்பணித்தார்” என்று திருமாவளவன் பேசினார்.

தற்போது தொடர்ந்து திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கிறார்.