‘ஏர் இந்தியா ஒன்’ விஐபி விமானங்கள் வாங்கப்பட்டதன் பின்னணி குறித்த பரப்பு தகவல்

 

வி.ஐ.பி. விமானங்கள்

இராம. சுகந்தன்

பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் பயணம் செய்வதற்காக இரண்டு விமானங்கள் வாங்கப்பட்ட செய்தி வெளிவந்ததில் இருந்து, சில பாஜக தலைவர்கள், இது காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தினால் வாங்கப்பட்டது என்ற பொய்யை பரப்பி வருகிறார்கள்.

உண்மையில் யார் ஆட்சியில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது ? என்பது குறித்த பல முக்கிய தகவல்கள் ஆதாரத்துடன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பாஜவின் பொய்யுரைகளை தோலுரித்து வருகின்றனர்.

2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டில், இந்த இரண்டு விமானங்களை வாங்குவதற்கு 4 ஆயிரத்து 469 கோடி ரூபாய் ஓடுத்துக்கப்பட்டிருப்பது, அரசு வலைத்தளத்தில் இருக்கும் பட்ஜெட் ஆவணத்தில் இருக்கிறது.

2019 – 20 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேலும் 1084 கோடி ஒதுக்கப்பட்டது.

2020-21 பட்ஜெட்ல 903 கோடி ஒதுக்கீடு. மொத்தத்தில் 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 456 கோடி பணத்தை, இந்த இரண்டு விமானங்களை வாங்க பா.ஜ.க அரசு ஒதுக்கியது.

 

இது விமானம் வாங்குறதுக்கான செலவு மட்டுமே. இதற்கு மேல் விமானத்தின் கேபின் மறுசீரமைப்பு செலவு இருக்கிறது. அதற்கு 132 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என்று அமைச்சரே மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய். அந்த பணத்தை தேசிய சிறு சேமிப்பு துறையில் இருந்து எடுத்ததாக அவர் கூறினார்.

ஆகவே, விமானங்கள் வாங்குவதற்கான மொத்த பணமும், கடந்த 3 ஆண்டுகளில், பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்டது என்ற உண்மை இதன் மூலம் தெரிய வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போட்ட ஒப்பந்தத்துக்கு, இப்போது பணத்தை பெற்றுக்கொண்டு, அன்று பேசப்பட்ட விலைக்கு விமானத்தை கொடுக்க விமான நிறுவன முதலாளிகள் முட்டாள்கள் அல்ல. அதுமட்டுமல்ல, அதற்குள் தொழில்நுட்பமும் மாறியிருக்கும், ஒப்பந்தமும் காலாவதியாகி இருக்கும்.

 

பா.ஜ.க தலைவர்களின் இந்த பம்மாத்து வேலைகளை நன்கு அறிந்த நாட்டு மக்கள் இதுகுறித்து ஆதாரத்துடன் பா.ஜ.வினருக்கு சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

– நன்றி @angry_birdu