அது வேற வாய்.. “பல்டி” அடித்த முன்னாள் தலைமை செயலாளர்!

சென்னை,

மிழக அரசு மற்றும்  வருமான வரி அதிகாரிகளை விமர்சித்ததை திரும்ப பெறுகிறேன் ராமமோகன் ராவ்  பல்டி அடித்துள்ளார்.

தனது வீடு, மகன் வீடு, உறவினர்கள் வீடு மற்றும் அலுவலக அறைகளில் வருமான வரித்துறை யினர் அதிரடி சோதனை நடத்தியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து ஆவேசமாக பேட்டி அளித்திருந்தார் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ்.

ஜெயலலிதா இருந்திருந்தால்  இதுபோல் ஒரு ரெய்டு நடந்திருக்குமா, வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்ததில்லை, துணை ராணுவத்தினரை கொண்டு துப்பாக்கி முனையில் மிரட்டி னார்கள், இப்போதும் நான்தான் தலைமை செயலாளர்,  என பல்வேறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருந்தார்.

இது தமிழக அரசியல் மட்டுமல்லாது டெல்லி அரசியலிலும் எதிரொலித்தது.

அவரது பேட்டி குறித்து மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய வருமான வரித்துறையும், தலைமை செயலாளர் வீட்டில் சோதனை செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது பதில் சொல்லியிருந்தது.

தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில்  நடந்த சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங் களை தொடர்ந்தே தலைமை  செயலாளர் ராமமோகனராவ் வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து ராமமோகனராவ் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக அரசு மீதும், வருமான வரித்துறை மீதும் தான் கூறிய கருத்துக்களை திரும்ப பெறுவதாக ராமமோகனராவ் கூறி உள்ளார்.

அவர் கூறியதாவது:-

நான் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீதும், அதிகாரிகள் மீதும்  மிக உயர்ந்த மரியாதை வைத்துள்ளேன் என்றும், சோதனை காரணமாக நானும், எனது குடும்பத்தினரும் அடைந்த மன வேதனையின் காரணமாக ஒரு சில கருத்துக்களை கூறி விட்டேன்.

எனக்கு வருமான வரித்துறை குறித்து எந்த எண்ணமும் கிடையாது. அவர்கள், தங்களுடைய கடமையைத்தான் செய்தார்கள் என்றார்.

மேலும், தற்போதைய தமிழக புதிய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது நான்  அதிக மரியாதை வைத்துள்ளேன்,  அவர் மிகச்சிறந்த அதிகாரி என்று கூறினார்.

எனது பெயரில் எந்தவித அசையும் சொத்தோ, அசையா சொத்துக்களோ கிடையாது என்றும், எனது மனைவி பெயரில்தான் அசையும் சொத்துக்கள் உள்ளன.

எனது சொத்துக்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

மேலும், எனது மகன் விவேக் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். அவர்  பெரிய நிறுவனங்க ளுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். மேலும்  நிலக்கரி, சிமெண்டு போன்றவற்றை ஏற்றி அனுப்பும் சரக்கு போக்குவரத்து பணியும் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி