இந்திய அணிக்கெதிரான டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸ் நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலைப் பெற்றால், ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என்ற சென்டிமென்ட், 2021 பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும் உண்மையாகிவிட்டது.

கடந்த 1979ம் ஆண்டு, ஆஸ்திரேலிய மண்ணில், இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

அதேபோன்று, கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட்டில், இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 33 ரன்கள் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா. ஆனால், அப்போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா.

நடந்துமுடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுக்க, இந்திய அணி 336 ரன்கள் எடுத்து 33 ரன்கள் பின்தங்கியது. ஆனால், பழைய சென்டிமென்ட் படி, இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டது.