மோசமான வானிலை: புதுச்சேரியில் விமான சேவைகள் ரத்து

புதுச்சேரி:

ழை காரணமாக தொடர்ந்து மோசமான வானிலை நீடித்து வருவதால், புதுச்சேரியில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு செல்லும் 2 விமானங்களும், அங்கிருந்து புதுச்சேரி வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் பெங்களூரூக்கு விமான சேவை யைத் தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மோடி அரசு பதவி ஏற்றதும் உதான் திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி,  கடந்த 2017 ஆகஸ்ட்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுவை – ஹைதராபாத் இடையே விமான சேவையைத் தொடங்கியது. பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்கடந்த  ஜூலை 15-ம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது அங்கு மழை காரணமாக மோசனமான வானிலை நிலவி வருவதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.