எஸ்ஆர்எம் குழும நிறுவனர் பச்சமுத்து மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக சுமார் 70 கோடி ரூபாய் பெற்று பலரை மோசடி செய்தார் என கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மெடிக்கல் சீட் விவகாரத்தில் இதுவரை பல தனியார் கல்லூரி உரிமையாளர்கள் சிக்கியிருக்கிறார்கள். ஆனால் பச்சமுத்து விவகாரம் மட்டும் பெரிய அளவில் வெடித்திருப்பதற்கு முக்கிய காரணம், அவர் புதிய தலைமுறை செய்தி சேனல் உள்பட நான்கைந்து சேனல்களையும் சேர்த்து நடத்துவது.
pachamuthu4
சேனல்கள் இடையே நடக்கும் வியாபார கோதாவில் பச்சமுத்துவை வைத்து தனி டிராக்புகில் புதிய தலைமுறையை டிவியை பின்னுக்கு தள்ள வேகமாகவே தாக்குதல்கள் நடக்கின்றன..
பு.த.டீவியும் ஒரு காலத்தில மாறன் சகோதரர்கள் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகளை விரிவாக செய்தியில் காட்டியதின் விளைவு அது. பு.த, டீவி ஏன் அப்படி செய்தது?
பிரமாண்ட செலவில் பல நவீன தொழில் நுட்பங்களுடன் ஆங்கில சேனல்களுக்கு நிகராக பு.த.டிவி துவக்கமானபோது சன் டிவி உட்பட பல சேனல்கள் மிரண்டுபோய்விட்டன.
எல்லாவற்றிற்கும் மேலாக பு.த.டீவிக்கு கேபிளில் இடம் தராமல் மாறன் தரப்பு காய வைத்ததது..அதனால் ஏற்பட்ட ஆறாத வடுவே, மாறன்கள் மீதான நடவடிக்கை ளில் பு.த.டீவி ஏகத்திற்கும் குளிர்காய்ந்ததற்கு காரணமாக இருக்கலாம்.
இப்படி தோண்ட தோண்ட போய்க்கொண்டே இருக்கும் கும்மாங்குத்து படலம்.. சேனல் உரிமையாளர்களும் சிக்கல்களும் என்று தலைப்பிட்டு அலசினால்  அது  பெரிய புராணமாகவே இருக்கும்.
முதலீட்டாளர்களுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பத்தரவில்லை என்ற பயங்கரமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் சஹாரா டீவி குழுமத்தின் உரிமையாளரான சுப்ரடா ராய்.
24 ஆயிரம் கோடி ரூபாய் என்பதால் உச்சநீதிமன்றமே கையில் சாட்டையை எடுத்ததில் இன்றுவரை அவரால் வெளியே வரமுடியவில்லை.
அடுத்து சன் குழும விவகாரம். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஏர்செல் நிறுவனத்தை மத்திய அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி பிடுங்கிக்கொண்டார்கள் என்ற குற்றசாட்டில்  சிபிஐயே வழக்கை கையில் எடுத்து தனி நீதிமன்றத்தில் வைத்து தாளித்துக்கொண்டிருக்கிறது.
முன் ஜாமீன் மனுவே இந்திய வரலாற்றில் இல்லாத அளவில் மாதக்கணக்கில் இழுத்துக்கொண்டு போகிறது..
பிஎஸ்என்எல்லை பயன்படுத்தி போலி இணைப்பகத்தையே சில நூறு கோடிகளை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்ற பயங்கரமான குற்றச்சாட்டும் மாறன் சகோதரர்களை பின்னிக்கொண்டு அகலாமல் இருக்கிறது.
போலி இணைப்பக செயல் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று சொல்லி சன்டிவி குழும சேனல்களின் உரிமத்தையே புதுப்பிக்க முடியாது என்று மத்திய உள்துறையே கெடுபிடி காட்டிய அளவுக்கு போன திகில் கட்டமும் நடந்தேறியது..
நியூஸ் செவன் சேனல் நடத்தும் வைகுண்டராஜன் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடியை இழப்பு ஏற்படுத்திவருகிறார் என்று அவரது தம்பியே குற்றம்சாட்டுகிறார்.
ஒரு பேச்சுக்கு, குடும்ப சண்டையில் தற்போது அவர் அப்படி சொல்வதாக எடுத்துக்கொண்டாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் தொடர்பான நிறுவனங்களில் அரசு தரப்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளையும் அதனால் ஏற்பட்ட பரபரப்பான தகவல்களும் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் உண்மை
இப்போது எஸ்ஆர்எம் பச்சமுத்துமீது கூறப்பட்டிருப்பது மெடிக்கல் சீட் தருவதாக 75 கோடியை ஏப்பம் விட்டார் என்ற குற்றச்சாட்டு.
பரந்து விரிந்த கல்வி சாம்ராஜ்யத்தை பெற்றிருக்கும் பச்சமுத்து வெறும் 75 கோடியை திருப்பித்தர முடியாமலா சிக்குவார் என்ற கேள்வி புதிராகவே இருக்கிறது.
பாதிக்கப்பட்டதாக புகார் தந்திருப்பவர்களுக்கு உரிய பணத்தை அவர் தரப்பு தந்துவிடுவதாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது. இதனால் இந்த விவகாரத்திற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா.அல்லது வைக்க விடுவார்களா என்பதே இப்போதுள்ள கேள்வி.
ஏனெனில் மெடிக்கல் சீட் வகையறாக்களைவிட மற்ற சேனல் தலைகளின் ஆர்வlம் ப்ளஸ் சில சமாச்சாரங்கள் இருக்கும் என்பதால்,,,
ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு..பார்ப்போம்..
மூத்த பத்திரிகையாளர் ஆர். ஏழுமலை அவர்களின்  வாட்ஸ்அப் பதிவு: