டில்லி,

பிரபல பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்துவின்  பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் பி.வி.சிந்துவின் பெயரை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்தில் இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை பத்ம பூஷன் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது பிவிசிந்துவின் பெயரை மத்திய விளையாட்டுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து. உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும்,  கடந்த வாரம் நடைபெற்ற கொரிய ஓபனில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் காரணமாக   உலக பேட்மின்டன் தர வரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இவரை, நாட்டின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்ம பூஷன் விருதுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

பி.வி.சிந்து ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள பிவி.சிந்துவுக்கு ஆந்திர அரசு துணை கலெக்டர் பதவி கொடுத்து கவுரவப்படுத்தி உள்ளது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறு படமாகவும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.