டெல்லி:

பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது தங்கையுடன், பாரதிய ஜனதா கட்சியில்  இன்று சேர்ந்தார்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில், தனது தங்கையுடன் சாய்னா இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் தன்னை இணைந்துகொண்டார்

29 வயதான சாய்னா நேவால், அரியானாவைச் சேர்ந்தவர். இந்தியா சார்பாக உலக நாடுகளில் விளையாடு ஏராளமான பதக்கங்களை குவித்து பெருமை சேர்ந்தவர். இதுவரையில் 24 சர்வதேச விருதுகளை பேட்மிண்டன் விளையாட்டில் வென்றுள்ளார்.

பெண்கள் ஒன்றையர் பேட்மிண்டன் போட்டியில், லண்டனில் கடந்த 2012 ஆம்  ஆண்டு நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

ஏற்கனவே, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளை பெற்றுள்ள சாய்னாவுக்கு  கடந்த 2016ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தனது சகோதரியுடன் டெல்லி பாஜக அலுவலம் சென்றவர், அங்கிருந்த பாஜக தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துகொண்டார். பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஏற்கனவே கவுதம் கம்பீர், பபிதா போகத் உள்பட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது சாய்னாவும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.