பேட்மிட்டன் தரவரிசை பட்டியல்: ஸ்ரீகாந்த் 5வது இடத்திற்கு முன்னேற்றம்
சர்வதேச பேட்மிட்டன் தரவரிசை ப்ட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் முதல் 5 இடத்திற்கு திரும்பி உள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் சில்வர் பதக்கம் வென்ற பி.வி. சிந்து அதே 3வது இடத்தில் உள்ளார்.
கடந்த வியாழக்கிழமை உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதன் படி இந்திய பேட்மிட்டன் வீரரான ஸ்ரீகாந்த் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மலேசியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் வெற்றிப்பெற்றதன் காரணமாக 7வது இடத்தில் இருந்த ஸ்ரீகாந்த் தரவரிசை பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார். எனினும் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து அதே இடத்தில் இருந்து மாறவில்லை. மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் 9வது இடத்திலும், பி.வி. சிந்து 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தோனேசியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் தோல்வியை சந்தித்த H.S.பிரணாயி 14வது இடத்தையும், சமீர் வர்மா 20 இடத்திற்கும் தள்ளப்பட்டனர். இதேபோல் வைஷ்ணவி ரெட்டி 53வது இடத்தையும், ஸ்ரீ கிருஷ்ண பிரியா குந்தரவள்ளி 78 இடத்தையும் பிடித்துள்ளனர். தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ருத்விகா ஷிவானி கட்டே மூன்று இடங்களுக்கு முன்னேறி 90வது இடத்தில் உள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் தரவரிசைப்பட்டியலில் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் ஷிரக் ஷெட்டி ஜோடி 21வது இடத்தையும், மனு அத்ரி மற்றும் சுமீத் ரெட்டி ஜோடி 28வது இடத்தையும் பெற்றனர். பெண்கள் இரட்டையில் பிரிவில் அஷ்வினி போபன்னா மற்றும் சிக்கி ரெட்டி இணை மாறாமல் அதே 26வது இடத்தில் நீடித்துள்ளனர்.