துணை கலெக்டர் ஆகிறார்  பாட்மிண்டன் சிந்து!

மீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற வீராங்கனை சிந்து, ஆந்தி மாநிலத்தில் துணை  கலெக்டர் ஆகிறார்.

அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தை வென்ற உடனேயே  ஆந்திர அரசு அவருக்கு ரூ.3 கோடி பரிசளித்தது. மேலும், குரூப்-1 பிரிவில் அவர் விரும்பும் வேலையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது.

அரசு வேலையை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு  மீண்டும் ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் ஆந்திர அரசு அளிப்பதாக கூறியுள்ள குரூப் -1 பிரிவில் துணை ஆட்சியர் வேலையை ஏற்க சிந்து விரும்பு வதாக அவரது தாயார் விஜயா தெரிவிததுள்ளார்.  இது துணை கலெக்டர் பதவிக்கு இணையான பதவியாகும்.

தசற்போது சிந்து தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விரைவில் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு குரூப் 1 பதவியில் சேர்வார்.