ஒருநாள் பைலட் ஆக மாறிய பிவி சிந்து!

பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து விமானத்தை இயக்கி அசத்தியுள்ளார்.

sindhu

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிசி சிந்து கலந்து கொண்டார். சிந்து பைலட்டுகளுக்கான உடை, ஹெல்மெட் உள்ளிட்டவற்றை அணிந்துக் கொண்டு தேஜஸ் என்ற மிக இலகு ரக விமானத்தை துணைப்பைலட்டாக இருந்து இயக்கி உள்ளார். சிந்து விமானத்தை இயக்கும் போது விமானிகள் அருகில் இருந்து கொண்டு அவருக்கு உதவி உள்ளனர்.

sindhu

சிந்து பைலட் உடையில் விமானத்தை இயக்கும் புகைபப்டத்தினை ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ளனர். சிந்து இயக்கிய தேஜஸ் விமானம் கர்நாடகாவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.