டேராடூன்:

த்ரிநாத் கோவிலுக்கு யாத்ரிகர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானார்.

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை அழைத்து செல்லும் சேவையில் சுற்றுலா துறை மூலமாக ஹெலிகாப்டர்கள் சேவைகள் நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹரித்துவார், கேதர்நாத் போன்ற புனித ஸ்தலங்களுக்கு யாத்ரீகர்கள் செல்வதற்கு சுற்றுலா துறை மூலமாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், 6 யாத்ரீகர்கள் மற்றும் இரு பைலட்டுகளை சுமந்து கொண்டு பத்ரிநாத்திலிருந்து கேதர்நாத்க்கு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

பறக்கத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டர் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த பொறியாளர் ஒருவர் ரெக்கையில் சிக்கி பலியானார். மேலும், பைலட்டுகள் இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டரில் இருந்த மற்ற பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.