டுக்கி

கேரள மாநில எல்லைப்பகுதியான இடுக்கியில் உள்ள பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று  உறுதி ஆகி உள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது அதன் பிறகு அதிக அளவில் கொரோனா தொற்று உள்ள மாநிலமாக இருந்து அதன் பிறகு பாதிப்பு வெகுவாக குறைந்தது.   இதையொட்டி பலரும் கேரள அரசை பாராட்டி வந்தனர்.   ஆனால் கடந்த சில நாட்களாகக் கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று தலை தூக்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோன தொற்று மிகவும் அதிகமாக உள்ளதால் எல்லைப் பகுதியில் உள்ள இடுக்கியில் தொற்று பரவலாம் என அஞ்சப்பட்டது.  தையொடிட் அந்தப் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள், பத்திரிகையாளர்கள்  எனப் பல தரப்பட்டோரும் சோதிக்கப்பட்டனர்.  இதில் வந்தன்மேடு என்னும் ஊரில் உள்ள 39 வயது பேக்கரி உரிமையாளருக்குத் தொற்று உறுதி செய்யபப்ட்ட்து.

கடந்த 14 ஆம் தேதி அவருக்கு தொற்று உறுதியானதையொட்டி அவரை தொடுபுழா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.    அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகள் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.   அவருடைய தொடர்புகளை ஆய்ந்த போது அவருடைய பேக்கரிக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 500 பேர் வந்துள்ளனர்.   எனவே இந்த பேக்கரிக்கு வந்து சென்ற அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலை தளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் பிரியா, “நாங்கள் இதுவரை பாதிப்பு அடைந்தவருடன் தொடர்பில் இருந்த சுமார் 300 பேரின் பெயர்களை மட்டுமே கண்டு பிடித்துள்ளோம்.  அவருடைய சொந்த ஊரில் இவருக்கு அதிகம் தொடர்பு இல்லை.   ஆனால் அவருடைய  பேக்கரிக்கு பல லாரி ஓட்டுநர்கள் தமிழகத்தில் இருந்து வந்து தேநீர் அருந்துவது வழக்கமாகும் என்பதால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை

இதைத் தவிர இந்த பேக்கரி உரிமையாளர் அருகில் உள்ள கட்டப்பனா என்னும் ஊரில் உள்ள இரு பேக்கரிகளுக்கு அடிக்கடி சென்று பொருட்களை வாங்கி வந்துள்ளார்.  எனவே கட்டப்பனா பகுதியிலும் சோதனை தீவிரப்படுத்த பட்டுள்ளது.   மேலும் இந்த பகுதியில் உள்ள குமுளி மற்றும் கமபன் மேடு சுங்கச்சாவடிகளில் சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதி தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளன்ர்.    மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீட்டிலேயே விநியோகம் செய்யப்படுகிறது.