இந்தியில் தயாராகிறது ‘பாகமதி’….!

கடந்த வருடம் ஜனவரி மாதம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியானது ‘பாகமதி’. ஹாரர் த்ரில்லர் படமான இப்படத்திற்கு கதையை எழுதி, இயக்கியவர் ஜி.அசோக். யுவி க்ரியேஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தை, தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான பாத்திரத்தில் அனுஷ்கா நடித்தார். பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூல் கிடைத்தமையால் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி தயாரிக்கிறார் நடிகர் அக்‌ஷய் குமார். ஜி.அசோக்கே இந்தியிலும் இயக்குகிறார்.

அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க புமி பெட்னேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயராம் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார்.