‘துர்காவதி’ பெயரில் ஹிந்தி ரீமேக் ஆகும் பாகமதி…!

2018-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘பாகமதி’. முழுக்க நாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார்.

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அக்‌ஷய் குமார் கைப்பற்றி அதன் பணிகளைத் தொடங்கியுள்ளார். தெலுங்கு படத்தை இயக்கிய ஜி.அசோக்கே இந்தியிலும் இயக்கவுள்ளார்.

அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க புமி பெட்னேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘துர்காவதி’ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தை அக்‌ஷய் குமார், விக்ரம் மல்கோத்ரா மற்றும் பூஷண் குமார் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.