ஆரி நடிப்பில் உருவாகும் ‘பகவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக முருகன் சரவணன், எடிட்டராக அதுல் விஜய், இசையமைப்பாளராக பிரசன் பாலா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.