திறந்த வெளியில் மலம் கழித்தால் மரண தண்டனை : உத்திரப் பிரதேச நகராட்சி அறிவிப்பு

பாக்பத், உத்திரப் பிரதேசம்

த்திரப் பிரதேசத்தில் உள்ள பாக்பத் நகரில் திறந்த வெளியில் மலம் கழிப்போருக்கு மரண தனடனை என்னும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

உத்திரப் பிர்தேச மாநிலத்தில் மீரட் அருகே பாக்பத் என்னும் ஒரு நிறு நகரம் உள்ளது.   இங்கு பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப் பட்டு வருகிறது.    நகரின் அனைத்துப் பகுதிகளில் கழிப்பறைகள் அமைக்கபட்டு  நகரில் திறந்த வெளி கழிப்பறை இல்லா நகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது.   இந்நிலையில் பாக்பத் நகராட்சியின் பெயரில் அந்த நகரில் அல இடங்களில் சில போர்டுகள் வைக்கப்பட்டுளன.

அந்த போர்டுகளில், “திறந்த வெளியில் மலம் கழிப்போர் உடனடியாக கொல்லப்படுவார்கள்” என்னும் பொருளில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.    இதை ஒட்டி நகரெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   நகராட்சி இவ்வாறு மரண தண்டனை அளிக்கப் போவதாக அறிவித்திருந்தது பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியது.

இது குறித்து உள்ளூரை சேர்ந்த சூரஜ் கோயல், “நாம் வாழ்வது ஜனநாயக நாடு.  இங்கு ஒரு நகராட்சிக்கு இவ்வாறு மரண தண்டனை அளிக்கும் உரிமை கிடையாது.  அதிகாரிகள் இதை எவ்வாறு அனுமதித்தனர்?   அரசின் திறந்த வெளி கழிப்பிடம் ஒழுப்பு திட்டம் பாராட்ட வேண்டிய ஒன்றுதான்.  அதே சம்யத்தில் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுவது சரி அல்ல” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் பாஜக தலைவர் சஞ்சய் பிரஜாபதி, “இந்த போர்டுகள் வேண்டும் என்றே தவறாக எழுதப்படுள்ளன.   இது மோடி அரசின் மீது புழுதி வாரி அடிக்கும் திட்டமாகும்.    பாஜகவின் நற்பெயரை கெடுக்க நகராட்சி செய்த சதிகளில் இதுவும் ஒன்றாகும்.   தற்போது இந்த நகரசபையில் பாஜக உறுப்பினர்கள் இல்லாததால்  எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு நகராட்சி அனைத்து  போர்டுகளையும் நேற்றிரவு அகற்றி உள்ளது.