துபாய்: பஹ்ரைன் நாட்டில் காஷ்மீர் பிரச்சினைக்காக பேரணி நடத்திய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்நாடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹ்ரைன் நாட்டில் பக்ரீத் வழிபாட்டு நிகழ்ச்சியை அடுத்து, காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர் பேரணி நடத்தினர்.

பஹ்ரைன் நாட்டைப் பொறுத்தவரை இந்தப் பேரணி சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில், வழிபாட்டு நிகழ்வுகளை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்பது அந்நாட்டின் சட்ட விதிமுறை.

இந்த விதிமுறையை மீறியதற்காக சில தெற்காசிய நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.