ஆகஸ்ட் 8ம் தேதி பாகுபலி புகழ் ராணா திருமணம்?

சென்னை:

பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவின் திருமணம் ஆகஸ்டு 8ந்தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி புகழ் ராணா டகுபதி. இவர் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் . கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘லீடர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்,  பாகுபலி திரைப்படத்தின் புகழின் உச்சத்துக்கு சென்றார்.

இவருக்கும்,  அனுஷ்காவுக்கும் காதல் என முதலில் செய்திகள் பரவின. ஆனால் இருவரும் அதை மறுத்த நிலையில், சமீபத்தில், தனது காதலி மிஹீகா புகைப்படத்தை ராணா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, காதலர்களுக்கு அவரது குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டினார். தொடர்ந்து,  இரு வீட்டாருக்கும் இடையே திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று ரகசியமாக நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர்களருது திருமணம் விரைவில்  நடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில்  வரும் ஆகஸ்ட் மாதம் ராணா, மிஹீகா திருமணம் நடத்த குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாக தெலுங்கு திரையுலகதகவல்கள் பரவி வருகின்றன.