மினியாபாலிஸ்

மெரிகாவில் கறுப்பினத்தவரை விசாரணையில் கொன்ற அதிகாரிக்கு ஜாமீன் வழங்க ரூ.17 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபாலிஸ் நகரில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாயிட் கைது செய்யப்பட்டார்.   விசாரணையின் போது டெரக் சவுவின் என்னும் காவல்துறை அதிகாரி பிளாயிட் கழுத்தில் காலை வைத்து அழுத்தினார்.  அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாயிட் உயிர் இழந்தார்.

இதையொட்டி அமெரிக்கா முழுவதும் போராடஙக்ள் நடைபெற்று வருகின்றன.   வாஷிங்டன் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.   காவல்துறையினர் இந்த கொலைக்குக் காரணமான டெரக் சவுவின் மற்றும் அவருடன் விசாரணையில் இருந்த 3 காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெரக் சவுவின் தரப்பில் இருந்து ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றத்திடம் அரசு வழக்கறிஞர் மேத்யூ பிராங்க் இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதிக ஜாமீன் தொகை மற்றும் கடும் நிபந்தனைகள் விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையொட்டி நீதிமன்றம் டெரக் ச்வுவின் நிபந்தனைகளுடன் ஒரு மில்லியன் டாலர் அதாவது ரூ.7.5 கோடி மற்றும் நிபந்தனைகள் இல்லாமல் 1.25 மில்லியன் அதாவது ரூ.9.4 கோடி என மொத்தம் சுமார் ரூ.17 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  மேலும் டெரக் தனது துப்பாக்கியை அரசிடம் ஒப்புவிக்க வேண்டும், மாகாணத்தை விட்டு வெளியேறத் தடை, ஜார்ஜ் பிளாயிட் குடும்பத்தினரைச் சந்திக்க தடை எனப் பல நிபந்தனைகள் விதித்துள்ளன.