கொச்சி: கேரள தங்கக் கடத்தல் சம்பவத்தில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கேரளாவையே பரபரப்புக்குள்ளாக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் அரசியல் கட்சியினருடன் நெருக்கமாக இருந்ததால், பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் சுங்கத்துறையின் வழக்கில் ஸ்வப்னாவுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், ஸ்வப்னா சுரேஷ், என்ஐஏ வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகையால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்.