கும்பகோணம்

சிலை கடத்தல் வழக்கில் டி எஸ் பி காதர் பாட்சாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

அருப்புக்கோட்டைய சேர்ந்த ஆரோக்யராஜ் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிக்காக நிலத்த்தை தோண்டும் போது 6 பழங்கால சிலைகள் கிடைத்தன.   அவைகளை திருட்டுத்தனமாக விற்க அவர் முயன்று வந்தார்.  இதை அறிந்த போலீஸ் அதிகாரிகள் காதர்பாட்சா மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவரும் ஆரோகிய ராஜிடம் இருந்து சிலைகளை பறிமுதல் செய்தனர்.

ஆனால் அந்த சிலைகளை நீதிமன்றத்தில் அளிக்காமல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சிலை கடத்தல் செய்யும் தீனதயாளன் என்பவரிடம் விற்று விட்டனர்.   இது குறித்து தகவல் அறிந்த ஒரு காவலர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவருக்கு கடிதம் எழுதினார்.   அதை ஆதாரமகக் கொண்டு அவர் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கில், காதார் பாட்சா மற்றும் சுப்புராஜ் சிலைகளை ரூ. 5 கோடிக்கு விற்றதாகவும் அப்படி இருந்தும் பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

தமிழக அரசு காதர் பாட்சாவை பணியிடை நீக்கம் செய்ததை ஒட்டி அவர் தலைமறைவானார்.  கடுமையான தேடுதலுக்குப் பின் கும்பகோணத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.   அவர் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.   இன்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் காதர் பாட்சாவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.