மணப்பதாகச் சொன்னதால் கிடைத்த  ஜாமீன்..

மணப்பதாகச் சொன்னதால் கிடைத்த  ஜாமீன்..

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த சிராக் என்ற இளைஞர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை போலீசில் அளித்திருந்த புகாரில்’’ என்  மகளை ஆசை வார்த்தை கூறி சிராக் கடத்தி சென்று கெடுத்து விட்டார்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதனால் சிராக் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

உண்மை என்ன வென்றால்,காதல் வசப்பட்ட அந்த பெண் , தன் விருப்பத்தின் பேரில் தான் சிராக்குடன் சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த போது, அந்த பெண், மைனர்.

18 வயது பூர்த்தி ஆக 4 மாதம் மட்டும் இருந்தது.

இப்போது அந்த பெண் மேஜர் ஆகியுள்ள நிலையில், சிராக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார்.

‘’ பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்’’ என்று அவர் உறுதி மொழி அளித்தார்.

இதையடுத்து சிராக்கை ஜாமீனில் விடுவித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணத்துக்கு அந்த பெண்ணும் சம்மதம் சொல்லி உள்ளதால், இருவருக்கும் விரைவில்’ கல்யாணம் இருக்கும்