விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பைரவா. இயக்குனர் பரதன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் மொத்த நீளம்,  2 மணி நேரம் 40 நிமிடங்கள். படம் வெளியான முதல் நாளே,  படத்தின் காட்சிகள் கொஞ்சம் இழுவையாக உள்ளது என்று பலரும் விமர்சித்தார்கள்.

இதையடுத்து ஏழு நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இந்த நீக்கப்பட்ட காட்சிகளுடன் நேற்று காலை பைரவா ஓடிக்கொண்டிருக்கிறது.

“சுவாரஸ்யத்தைக் கூட்டும் விதமாக படத்தின் சில காட்சிகளை நீக்க படக்குழு முடிவுசெய்தது. இதன் படி பைரவா படத்தின் 7 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், படம் கூடுதல் விறுவிறுப்புடன் ஓடும்” என்று என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.