போபால்:

பணம் கேட்டு மிரட்டி தொழிலதிபரின் இரட்டையர் ஆண் குழந்தைகளை கொன்ற பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 6 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்தனர்.


இது குறித்து போலீஸார் கூறியதாவது:
மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகுட் பகுதியிலிருந்து 2 குழந்தைகளை கடத்தி உத்தரபிரதேசத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் போட்டு விட்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர்.

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்தின் பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுகாந்த் சுக்லா என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

தொழிலதிபர் ஒருவரை மிரட்டி அவரது இரட்டையர் ஆண் குழந்தைகளை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

இவர் நேரிடையாக ஈடுபடாவிட்டாலும், அவரது சகோதரர் பதாம் சுக்லா மற்றும் சிலர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் பயன்படுத்திய காரில் பாஜக கட்சிக் கொடியும் பஜ்ரங்தள் என்று எழுதப்பட்டும் இருந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

இதற்கிடையே, இந்த கொடூரக் கொலையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுதாலா கோரிக்கை விடுத்துள்ளார்.