ரோஹித் திலக்

மும்பை,

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக சுதந்திர போராட்ட தியாகி பால கங்காதர் திலகரின்  பேரன் ரோஹித் திலக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 40 வயதுடைய பெண்ணுடன் இரண்டு வருடங்களாக பழகி,  திருமணம் செய்வதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் தேசியவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான லோகமான்ய பாலகங்காதர திலகரின் பேரன் ரோகித் திலக்ர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது,

இரண்டு வருடங்களாக அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, ரோஹித் பாலியல் வன்புணர்வு கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரோகித்மீது, கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டுகள்,  காயம் விளைவித்தல், அமைதி மற்றும் குற்றவியல் அச்சுறுத்தலை தூண்டிவிடும் நோக்கம் கொண்ட உள்நோக்கத்துடன் இந்திய குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதன் காரணமாக  ரோஹித் திலகர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

மகாரஷ்டிரா சட்டமன்ற தேர்தலின்போது, பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரான கிரிஷ் பாபாத்திற்கு எதிரா‘க புனேயில் கஸ்பா பேத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக  போட்டியிட்ட ஜெயந்த்ரா திலகரின் மகன் ரோகித் திலகர் என்பது குறிப்பிடத்தக்கது.