மீண்டும் ஆரிக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் பாலாஜி…..!

நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்ற நிஷாவை வெளியே அனுப்பினால் பிக்பாஸ் ஆட்டம் வேறுவிதமாக மாறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுநாள்வரை எனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என கூறி வந்த பாலாஜி முருகதாஸ் நேற்று கேப்டன் ஆகியே தீருவேன் என ஒற்றைக்காலில் நின்றார். ஆனால் விதி விளையாடி விட்டது. ஷிவானியிடமும் இதுகுறித்து அவர் புலம்பி கொண்டிருந்தார். குறிப்பாக ஆரி பொய் சொல்லி விட்டார். அவர் நேர்மையாக இல்லை. எனக்கு அநியாயம் செய்து விட்டனர் என்று தெரிவித்தார்.

கேப்டன் டாஸ்க்கில் ரமேஷ் வெற்றி பெற்று கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவரை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது.

தற்போது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் பாலா ஆரியை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்பது போல் இருக்கிறது.

இரண்டாவது ப்ரோமோவில் பாலா இனிமே நான் குரல் உயர்த்த போவதில்லை என கூறியுள்ளார்.