ஈஸ்வரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய பால சரவணன்….!

சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகர் பால சரவணன், ஈஸ்வரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கேக் வெட்டி சிலம்பரசனுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்துள்ளார் பாலா. அருகில் படத்தின் நாயகி நிதி அகர்வால் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.