யப்பா என்னை உன்கூட உள்ள அனுப்பி சாவடிக்கிறாங்கப்பா என சுச்சியை பார்த்து எரிச்சலடையும் பாலாஜி…..!

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க்கில் சோம் குக்கூவாக இருந்த அர்ச்சனா, சம்யுக்தா அணியே வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று ரம்யாவை திடீரென சோம் வம்பிழுத்தார். நீண்ட நாட்களாக சோம் முயற்சி செய்தும் ரம்யா சிக்க மாட்டேன் என நழுவி விடுகிறார். ஆனாலும் சோம் மனம் தளராமல் மீண்டும் நேற்று வம்பிழுத்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீடு அமைதியாக இருந்ததால் பெரும்பாலும் சண்டைகள் எதுவும் இல்லை.

இந்த வாரம் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்களாக இந்த மூன்று பேரில், இரண்டு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி போட்டியாளர்கள் சுசித்ராவையும், பாலாவையும் ஜெயிலுக்கு அனுப்புவதை காணமுடிகிறது.

சிறையில் சுசித்ரா பாலாவுக்கு எதிராக பேச, அவர் கோபப்பட்டு பேசுவதையும் காண முடிகிறது.